ETV Bharat / sports

வலுவடையும் வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Heavy Rain Alert: தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 4:46 PM IST

Updated : Oct 25, 2023, 5:41 PM IST

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல வானிலை மையம் கூறியிருப்பதாவது; "நேற்று (அக்.24) காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் ஹாமூன் நேற்று மாலை 17.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவிழந்தது. இன்று (அக்.25) காலை 1.30 - 2.30 மணி அளவில் புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை தெற்கு சிட்டகாங்க்கு அருகில் கடந்தது.

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேப்போல் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது" என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு: இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுவில் அதிகபட்சமாக போடிநாயக்கனூரில் 5 செ.மீ மழையும் , பட்டுக்கோட்டை, சோத்துப்பாறை, வால்பாறை PTO தலா ஆகிய பகுதிகளில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அதேபோல் வேதாரண்யம், மானாமதுரை, ராமநாதபுரம், தொண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், கூடலூர், தேக்கடி, பெரியாறு, சிவகிரி, பயணியர் விடுதி சிவகங்கை, வீரபாண்டி, பெலாந்துறை, அரண்மனைப்புதூர், கருப்பாநதி அணை, மணியாச்சி ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும் , திருவாடானை, உத்தமபாளையம், குப்பணம்பட்டி, ஆர்.எஸ்.மங்கலம், ஆயின்குடி, கடல்குடி, சோலையார் அகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில்(4மணி வரை): ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், ஆரியலூர், பெரம்பலுர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "33 வருடங்களுக்குப் பிறகு வழிகாட்டி அமிதாப்பச்சனுடன் பணியாற்றுவதில் இதயம் துள்ளுகிறது" - ரஜினிகாந்த்!

Last Updated : Oct 25, 2023, 5:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.