ETV Bharat / sports

டென்மார்க் வீராங்கனையிடம் முதல்முறை தோல்வியடைந்த சாய்னா நேவால்! - சாய்னா நேவால் - லைன் ஜார்ஸ்ஃபெல்ட்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் டென்மார்கின் லைன் ஜார்ஸ்ஃபெல்டிடம் தோல்வி அடைந்தார்.

Saina Nehwal crashes out of Thailand Masters

author img

By

Published : Jan 22, 2020, 7:45 PM IST

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், டென்மார்க்கைச் சேர்ந்த லைன் ஜார்ஸ்ஃபெல்ட்டை (Line Kjaersfeldt) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா நேவால் 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். இப்போட்டிக்கு முன் கடந்த நான்கு முறையும் லைன் ஜார்ஸ்ஃபெட்டிடம் வெற்றிகண்ட சாய்னா இம்முறை முதல்முறையாக தோல்வியடைந்துள்ளார்.

முன்னதாக இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெங்காலின் ஜடேஜாவாக இருக்க விருப்பம்’ - ஹாட்ரிக் நாயகன் அகமது!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/badminton/saina-nehwal-crashes-out-of-thailand-masters/na20200122174442090

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.