சுவிட்ஸர்லாந்தின் பாசெல் நகரில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர்களுக்கான ஒற்றையர் சுற்று இறுதி போட்டியில் இந்திய வீரர் சாய் பிரணித், சீனாவின் ஷி யூகியுடன் மோதினார்.
ஆட்டத்தின் முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய சாய் பிரணித் 21-19 என்ற கணக்கில் ஷி யூகியை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட்டில் சாய் பிரணித் 18-21 என்ற கணக்கில் ஷி யூகி உடன் தோல்வி அடைந்தார்.
பின் ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ஷி யூகியின் அபாரமான ஆட்டத்தால், சாய் பிரணித் 12-21 என்ற கணக்கில் இழந்தார்.
இதன் மூலம் சாய் பிரணித் 21-19, 18-21, 12-21 என்ற செட் கணக்கில் ஷி யூகியுடன் போராடி தோல்வி அடைந்ததன் மூலம் வெள்ளிப்பதகத்தை மட்டுமே பெற்றார்.