நடப்பாண்டிற்கான சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று (மார்ச்.6) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, டேனீஷ் நாட்டின் மியா பிளிச்ஃபெல்ட்டை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சிந்து, முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் போராடி வென்றார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட சிந்து 21-10 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி பிளிச்ஃபெல்ட்டிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் பிவி சிந்து 22-20, 21-10 என்ற நேர் செட் கணக்கில், மியா பிளிச்ஃபெல்ட்டை வீழ்த்தி சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இன்று(மார்ச்.7) நடைபெறும் இறுதி போட்டியில் பிவி சிந்து, ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினுடன் மோதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கடின உழைப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்' - கருண் நாயர்