உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில்
பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார்.
BWF உலக சாம்பியன்ஷிப்ல் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பி.வி சிந்துவின் குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடடினர்.
பி.வி சிந்துவின் தாயார் விஜயா கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அந்த தங்கப் பதக்கத்தை பார்க்க ஆவளோடு இருப்பதாகவும் கூறுகிரார்.