ETV Bharat / sports

'வீரர்களின் பாதுகாப்பை விட அவர்களுக்கு பணமே முக்கியம்' - சாய்னா நேவால்

கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையிலும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது குறித்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Players' safety compromised for financial reasons in All England Open: Saina Nehwal

author img

By

Published : Mar 18, 2020, 11:16 PM IST

கோவிட்-19 வைரஸால் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 15ஆம் தேதி முடிவுபெற்றது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் சாய்னா நேவால் முதல் சுற்றிலிருந்தும், பி.வி. சிந்து காலிறுதிப் போட்டியிலிருந்தும் வெளியேறினர்.

இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், ”கோவிட் -19 வைரஸால் பல்வேறு நாடுகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், ஆல் இங்கிலாந்து ஓபன் தொடர் நடைபெற்றது முட்டாள்தனமாக இருந்தது. இந்தத் தொடர் தேவை தானா” எனக் கேள்வி எழுப்பினார்.

Saina Nehwal
சாய்னா நேவால் ட்வீட்

இதற்கு சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வீரர், வீராங்கனைகளின் உடல்நலத்தை விட பணத்திற்கே முக்கியம் அளிக்கப்பட்டது. இதுதவிர ஆல் இங்கிலாந்து ஓபன் தொடர் நடைபெற வேறு காரணம் இல்லை” எனப் பதலிளித்திருந்தார். ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் முடிந்தவுடன் நடைபெறவிருந்த இந்தியா ஓபன், மலேசிய மாஸ்டர்ஸ் உள்ளிட்ட ஐந்து பேட்மிண்டன் தொடர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

இதையும் படிங்க: கொரோனா பீதி: ஹைதராபாத்தில் மூடப்பட்ட பேட்மிண்டன் அகாதமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.