ETV Bharat / sports

#chinaOpen2019: தொடரிலிருந்து வெளியேறிய இந்தியாவின் இரட்டையர் அணி!

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சத்விக்சைராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை அதிர்ச்சி தோல்விடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Satvik-Chirag
author img

By

Published : Sep 19, 2019, 1:36 PM IST

சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது அந்நாட்டின் சாங்ஸௌ (Changzhou) நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சத்விக்சைராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை ஜப்பானின் தாகேஷி கமுரா, கெய்கோ சோனோடா இணையை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ரங்கிரெட்டி இணை கமுரா இணையின் அதிரடி ஆட்டத்தில் சிக்கி சிதைந்தது. ரங்கிரெட்டி இணை முதல் செட் கணக்கை 19-21 என்ற புள்ளிக்கணக்கில் கமுரா இணையிடம் பேராடி இழந்தது.

அதன் பின் கமுரா இணை இரண்டாவது செட்கணக்கை 21-08 என்ற புள்ளிகள் அடிபடையில் வென்றது. இதன் மூலம் ஜப்பானின் தாகேஷி கமுரா, கெய்கோ சோனோடா இணை 21-19, 21-08 என்ற நேர்செட் கணக்கில் இந்தியாவின் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணையை வீழ்த்தியது.

இதன் மூலம் இந்தியாவின் சத்விக்சைராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறியது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/badminton/satvik-chirag-crash-out-of-china-open/na20190919113238814

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.