இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரரும், உலக பேட்மிண்டன் தரவரிசையில் 41ஆவது இடத்தில் உள்ளவருமான லக்ஷயா சென், ஸ்காட்லாந்தில் நடைபெற்று வந்த ஸ்காட்டிஷ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஸ்காட்டிஷ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் லக்ஷயா சென், பிரேசலின் யாகோர் கோயல்ஹோ டி ஒலிவேராவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஒலிவேரா 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி சென்னிற்கு அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் இரண்டாவது செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் நடைபெற்ற வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் தொடர்ந்து தனது அதிரடியை காண்பித்த லக்ஷயா சென் 21-19 என்ற கணக்கில் ஒலிவேராவை வீழ்த்தி, ஸ்காட்டிஷ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
-
Lakshya's 4th Title Win in 3 months!
— BAI Media (@BAI_Media) November 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
• Scottish Challenge ✅
• Saarlorlux Open S100 ✅
• Dutch Open S100 ✅
• Belgian Challenge ✅
Rising fast in the world rankings, the unstoppable @lakshya_sen is making the right noise for 🇮🇳. 👏#IndiaontheRise#badminton pic.twitter.com/ZOec8EGj9e
">Lakshya's 4th Title Win in 3 months!
— BAI Media (@BAI_Media) November 25, 2019
• Scottish Challenge ✅
• Saarlorlux Open S100 ✅
• Dutch Open S100 ✅
• Belgian Challenge ✅
Rising fast in the world rankings, the unstoppable @lakshya_sen is making the right noise for 🇮🇳. 👏#IndiaontheRise#badminton pic.twitter.com/ZOec8EGj9eLakshya's 4th Title Win in 3 months!
— BAI Media (@BAI_Media) November 25, 2019
• Scottish Challenge ✅
• Saarlorlux Open S100 ✅
• Dutch Open S100 ✅
• Belgian Challenge ✅
Rising fast in the world rankings, the unstoppable @lakshya_sen is making the right noise for 🇮🇳. 👏#IndiaontheRise#badminton pic.twitter.com/ZOec8EGj9e
இதற்கு முன் இவர் இந்தாண்டு நடைபெற்ற சார்லார்லக்ஸ் ஓபன், டச்சு ஓபன் மற்றும் பெல்ஜியம் இன்டர்நேஷனல் பேட்மிண்டன் தொடர்களின் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார் நரேன் கார்த்திகேயன்!