உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்திய நட்சத்திர வீரர் சாய் பிரனீத், ஆசிய சாம்பியனான இந்தோனேசியாவின் ஜொனதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.
-
🇮🇳 @saiprneeth92 surprised us by knocking out 🇮🇩 @jonatan979 in two games.
— BWF (@bwfmedia) August 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
MS - Quarterfinal
24 21 🇮🇳Sai Praneeth B.🏅
22 14 🇮🇩Jonatan Christie
🕗 in 51 minutes#TOTALBWFWC2019 #Basel2019
📸 @badmintonphoto pic.twitter.com/7bccp3ECnU
">🇮🇳 @saiprneeth92 surprised us by knocking out 🇮🇩 @jonatan979 in two games.
— BWF (@bwfmedia) August 23, 2019
MS - Quarterfinal
24 21 🇮🇳Sai Praneeth B.🏅
22 14 🇮🇩Jonatan Christie
🕗 in 51 minutes#TOTALBWFWC2019 #Basel2019
📸 @badmintonphoto pic.twitter.com/7bccp3ECnU🇮🇳 @saiprneeth92 surprised us by knocking out 🇮🇩 @jonatan979 in two games.
— BWF (@bwfmedia) August 23, 2019
MS - Quarterfinal
24 21 🇮🇳Sai Praneeth B.🏅
22 14 🇮🇩Jonatan Christie
🕗 in 51 minutes#TOTALBWFWC2019 #Basel2019
📸 @badmintonphoto pic.twitter.com/7bccp3ECnU
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சாய் பிரனீத் 24-22, 21-14 என்ற செட் கணக்கில் ஜொனதன் கிறிஸ்டியை வீழ்த்தி முதல் முறையாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
கடந்த 1983ஆம் ஆண்டு சம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரகாஷ் படுகோனே வெண்கலம் வென்றதே இதுவரை சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு பேட்மிண்டனில் இந்தியாவிற்கு கிடைத்த ஒரே பதக்கம்.
தற்போது 36 ஆண்டுகளுக்கு பிறகு ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதிசெய்துள்ளார்.