சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பால் ஆண்டு தோறும் ஜெர்மனியில் சார்லார்லக்ஸ் ஓபன் பேட்மிண்ட தொடர் நடத்தப்படுவது வழக்கம். அதன் படி இந்தாண்டும் சார்லார்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த அக்.25ஆம் தேதி முதல் தொடங்கியது.
இத்தொடரில் இந்தியா சார்பாக நடப்பு சாம்பியன் லக்ஷயா சென் உள்ளிட்ட பல வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்ற வீரர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கடந்த 25ஆம் தேதி கரோனா கண்டறிதல் சோதனையை மேற்கொண்டார்.
இச்சோதனையின் முடிவில் இந்திய அணியின் பயிற்சியாளர் டிகே சென்னிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், இந்திய அணி வீரர்கள் பயிற்சியாளுருயன் இருந்ததினால், நடப்பாண்டு சார்லார்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து இந்திய அணி முற்றிலுமாக விலகுமாறு இந்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுதியது.
-
#BWF confirm three players are isolating after coming in contact with a member of their team entourage who has tested positive for #COVID19 #SaarLorLuxOpen2020 #badmintonhttps://t.co/UD0uQEf6Hj
— BWF (@bwfmedia) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#BWF confirm three players are isolating after coming in contact with a member of their team entourage who has tested positive for #COVID19 #SaarLorLuxOpen2020 #badmintonhttps://t.co/UD0uQEf6Hj
— BWF (@bwfmedia) October 29, 2020#BWF confirm three players are isolating after coming in contact with a member of their team entourage who has tested positive for #COVID19 #SaarLorLuxOpen2020 #badmintonhttps://t.co/UD0uQEf6Hj
— BWF (@bwfmedia) October 29, 2020
அதன்படி இந்திய வீரர்கள் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அதேசமயம் லக்ஷயா சென், அஜய் ஜெய்ராம், சுபாங்கர் ஆகிய மூன்று வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளானர். மேலும் டிகே சென், லக்ஷயா சென்னின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘விளையாட்டு குறித்த உரையாடல் சிறப்பாக அமைந்தது’ - சுரேஷ் ரெய்னா!