சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்த ஆண்டு ஜனவரி 12 முதல் 17ஆம் தேதிவரையும், பாங்காக் ஓபன் தொடர் ஜனவரி 19 முதல் 24ஆம் தேதிவரையும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவின் உலகின் நம்பர் ஒன் வீரரான சஞ்சய சுகமுல்ஜோ, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து இம்மாதம் நடைபெறும் தாய்லாந்து ஓபன் தொடரிலிருந்து மார்கஸ் ஃபெர்னால்டி - சஞ்சய சுகமுல்ஜோ இணை விலகுவதாக அறிவித்துள்ளனர். இத்தகவலை சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பின் ட்வீட்டில், “கெவின் சஞ்சய சுகமுல்ஜோவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் இரட்டையர்கள் மார்கஸ் ஃபெர்னால்டி மற்றும் கெவின் சஞ்சய சுகமுல்ஜோ இணை தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகியது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
World No.1 pair Marcus Fernaldi Gideon and Kevin Sanjaya Sukamuljo pulled out of the Asian Leg of the HSBC BWF World Tour after Sukamuljo tested positive for COVID-19. #HSBCbadminton #BWFWorldTourhttps://t.co/pbWviUHauz
— BWF (@bwfmedia) January 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">World No.1 pair Marcus Fernaldi Gideon and Kevin Sanjaya Sukamuljo pulled out of the Asian Leg of the HSBC BWF World Tour after Sukamuljo tested positive for COVID-19. #HSBCbadminton #BWFWorldTourhttps://t.co/pbWviUHauz
— BWF (@bwfmedia) January 5, 2021World No.1 pair Marcus Fernaldi Gideon and Kevin Sanjaya Sukamuljo pulled out of the Asian Leg of the HSBC BWF World Tour after Sukamuljo tested positive for COVID-19. #HSBCbadminton #BWFWorldTourhttps://t.co/pbWviUHauz
— BWF (@bwfmedia) January 5, 2021
முன்னதாக ஒற்றையர் பிரிவின் நம்பர் ஒன் வீரரான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து பேட்மிண்டன் தொடரிலிருந்து ஜப்பான் அணி விலகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேன் வில்லியம்சன் இரட்டைச் சதம்: முன்னிலையில் நியூசிலாந்து