கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு செப்படம்பர் மாதம் ஆக்லாந்தில் நடைபெறுவதாக இருந்த ஜூனியன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்தொடருக்கான மாற்று தேதியை சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நியூசிலாந்தில் இந்தாண்டு நடைபெறுவதாக இருந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் கலப்பு இரட்டையருக்கான ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரான ஜனவரி 11 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
BWF World Junior Championships 2020 in Auckland, New Zealand moved to January 2021.#HSBCBWFbadmintonhttps://t.co/1uSTZVGukq
— BWF (@bwfmedia) May 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BWF World Junior Championships 2020 in Auckland, New Zealand moved to January 2021.#HSBCBWFbadmintonhttps://t.co/1uSTZVGukq
— BWF (@bwfmedia) May 29, 2020BWF World Junior Championships 2020 in Auckland, New Zealand moved to January 2021.#HSBCBWFbadmintonhttps://t.co/1uSTZVGukq
— BWF (@bwfmedia) May 29, 2020
இதுகுறித்து அக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தாமஸ் லண்ட் கூறுகையில், ‘தற்போது உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரை அடுத்த ஆண்டு நடத்துவதே சிறந்த வழியாகும். இதன் காரணமாகவே, இத்தொடர் தற்போது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:2011 உலகக்கோப்பை ஃபைனலில் தோனியால்தான் 2 முறை டாஸ் போடப்பட்டது - சங்ககரா