ETV Bharat / sports

சீனாவின் முடிவிற்காக காத்திருக்கும் சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு! - சீன போது விளையாட்டு நிர்வாகம்

கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த சீன பேட்மிண்டன் தொடர்கள் குறித்து அந்நாட்டின் தெளிவான விளக்கத்திற்கு காத்திருப்பதாக சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

bwf-looking-for-more-clarity-before-deciding-on-events-in-china

author img

By

Published : Jul 12, 2020, 4:17 AM IST

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் அச்சுறுத்தலினால் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த முக்கிய விளையாட்டு தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது வைரஸின் தாக்கம் ஒருசில நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், பார்வையாளர்களின்றி விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளன. இதன் ஒருபகுதியாக சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பும், ஒத்திவைக்கப்பட்ட பேட்மிண்டன் தொடர்களுக்கான மாற்று அட்டவணையை வெளியிட்டது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வகையாக, 2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தகுதிச்சுற்று போட்டிகளைத் தவிர, இந்த ஆண்டு வேறு எந்த சர்வதேச போட்டிகளையும் சீனா நடத்ததாது என சீனாவின் பொது விளையாட்டு நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது மாற்றியமைக்கப்பட்ட போட்டி அட்டவணைகள் குறித்து நாங்கள் சீன பேட்மிண்டன் கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து வருகிறோம். ஏனெனில் சீனாவின் இந்த முடிவால் பி.டபிள்யூ. எஃப்-க்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சீனாவின் போது விளையாட்டு நிர்வாக துறைக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். அதனால் அவர்களின் தெளிவான முடிவிற்கு பிறகே சர்வதேச பேட்மிண்டன் தொடர்கள் குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக கரோனா வைரஸின் அச்சுறுத்தலால் சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஏற்கனவே நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் பி.டபிள்யூ. எஃப்- இன் மாற்றியப்பட்ட அட்டவணை படி சீனா ஓபன் வேர்ல்ட் டூர் சூப்பர் 1000 நிகழ்வு (செப்டம்பர் 15-20) மற்றும் புஜோ சீனா ஓபன் வேர்ல்ட் டூர் சூப்பர் 750 ( நவம்பர் 3-8) ஆகிய தொடர்கள் இந்த ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: டிராவிட்டின் சாதனையை கவுரவித்த ஐசிசி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.