ETV Bharat / sports

கொரோனா பீதி: ஹைதராபாத்தில் மூடப்பட்ட பேட்மிண்டன் அகாதமி!

ஹைதராபாத்: கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபிசந்த்தின் அகாதமி மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

badminton-academies-in-hyderabad-shut-down-until-march-31

author img

By

Published : Mar 16, 2020, 1:42 PM IST

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் வருகின்றன. இதனிடையே ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபிசந்த்தின் பேட்மிண்டன் அகாதமியில் பயிற்சிகளும் ரத்து செய்யப்பட்டு மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோபிசந்த் பேசுகையில், '' எப்போதும் வீரர்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் முக்கியமானது. தெலங்கானா மாநில அரசின் அறிவுறுத்தலின்படி அகாடமியின் கதவுகள் மூடப்பட்டு பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது பயிற்சிகள் தொடங்கம் என அனைவருக்கும் உரிய முறையில் அறிவிக்கப்படும். உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்கு ஏற்ப வீரர்களின் பயிற்சிகள் திட்டமிடப்படும்'' என்றார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தெலங்கானாவில் உள்ள மால்கள், உடல்பயிற்சி கூடங்கள், மைதானங்கள், கல்வி நிறுவனங்கள், திரையரங்கங்கள் என அனைத்தயும் மூடுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பேட்மிண்டண் அகாதமி 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து ஒருமுறை கூட மூடப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'சாம்பியன்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள்' - பி.வி. சிந்துவின் கதை...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.