ETV Bharat / sports

பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் நடையைக் கட்டிய சாய்னா

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றுடன் தோல்வி அடைந்துள்ளார்.

முதல் சுற்றுடன் நடையைக் கட்டிய சாய்னா
author img

By

Published : May 1, 2019, 5:22 PM IST

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் சுற்றுப் போட்டியில், 9ஆம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், 212ஆம் நிலையில் உள்ள சீனாவின் வாங் ஸிஹி (Wang Zhiyi) உடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 16-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்த சாய்னா, இரண்டாவது செட்டை 23-21 என்ற கணக்கில் போராடி வென்றார். இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் போட்டி நடைபெற்றது.

இதில், இளம் வீராங்கனை வாங்கின் அசத்தலான ஆட்டத்துக்கு முன் சாய்னாவின் ஆட்டம் எடுபடவில்லை. இதனால், மூன்றாவது செட்டை சாய்னா 4-21 என்ற கணக்கில் வீழ்தினார். இதன் மூலம், இப்போட்டியில் சாய்னா நேவால் 16-21, 23-21, 4-21 என்ற செட் கணக்கில் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

இதேபோல, நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், இந்திய வீரர் லக்ஷ்யா சென் 21-15, 18-21, 10-21 என்ற செட் கணக்கில் தைவானின் வாங் சூ வெய் (Wang Tzu Wei) உடன் போராடி தோல்வி அடைந்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய ஜோடி அஷ்வினி பொன்னப்பா - சிகி ரெடி 14-21, 23-21, 14-21 என்ற செட் கணக்கில் சீனாவின் லியூ ஸூவான்ஸூவான் - ஸியா யூடிங் ( Liu Xuanxuan - Xia yuting) ஜோடியிடம் வீழ்ந்தது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.