சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வெப் சீரிஸ் தொடராக உருவாகவுள்ளது.
இந்தத் தொடரை, வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை கூறிய வனயுத்தம் படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கவுள்ளார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இசை - விஜய் சங்கர்.
இந்தத் தொடர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் தயாராகவுள்ளது.
வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்கவுள்ளார். இத்தொடரின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்வுள்ளது.
ஏற்கனவே வீரப்பன் வாழ்க்கையை வைத்து திரைப்படங்கள் வெளியாகி பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஓடிடி தளத்தில் வெப்சீரிஸ் தொடராக உருவாகவுள்ளது.
இதையும் படிங்க: "படம் பார்ப்பதா அல்லது சீரிஸ் பார்ப்பதா?" - குழப்பத்தில் ராஜ்குமார் ராவ்!