கரோனாவிலிருந்து மீண்டெழுந்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், சுமார் ஆறு மாத காலத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்ப உள்ளார்.
எல்விஸ் ப்ரெஸ்லி எனும் பிரபல அமெரிக்க இசைக்கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை ’ரோமியோ-ஜூலியட்’, ’த க்ரேட் கேட்ஸ்பி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பஸ் லஹர்மேன் இயக்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பிற்காக டாம் ஹாங்க்ஸ் ஆஸ்திரேலியா திரும்ப உள்ளதை இயக்குநர் பஸ் லஹர்மேன் உறுதிப்படுத்தியுள்ளார். வார்னஸ் ப்ரதர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ள நிலையில், வருகிற 23ஆம் தேதி முதல் குயின்ஸ்லேண்டில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்புகள் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக குயின்ஸ்லேண்ட் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்துள்ள பஸ் லஹர்மேன், குயின்ஸ்லேண்ட் மக்கள் என்றுமே தங்களது படப்பிடிப்பு பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக குயின்ஸ்லேண்டில் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கவிருந்த நிலையில், டாம் ஹேங்க்ஸும் அவரது மனைவி ரிடா வில்சனும் கரோனா தொற்றுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கிய டாம் ஹாங்ஸ்