பிக்பாஸ் ஐந்தாவது சீசன் 98 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக செல்கிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் பட்டத்தைத் தட்டிச் செல்வார் என்பதைத் தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
தற்போது பிரியங்கா, நிரூப், ராஜூ, அமீர், பாவனி, தாமரை ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். நிரூப், அமீர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிச் சென்றுவிட்டதால், அவர்களைத் தவிர நான்கு பேர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் மக்களிடம் குறைவான வாக்குகளைப் பெற்று இந்த வாரம் தாமரை வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வாரம் நிகழ்ச்சியின் இறுதி என்பதால், யார் டைட்டில் பட்டத்தை வெல்லப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: 'ஐஸ்வர்யா முருகன்' வெளியீட்டுத் தேதி தள்ளிவைப்பு!