ETV Bharat / sitara

பிக்பாஸ் வீட்டில் வனிதாதான் நேர்மையானவர் - சினேகன் சிறப்புப் பேட்டி

'பிக்பாஸ் சீசன் 3' ல் வனிதாதான் நேர்மையாக இருக்கிறார் என பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.

snehan
author img

By

Published : Sep 9, 2019, 5:40 PM IST

தமிழில் தனியார் சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்துகொண்ட நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

சினேகன் சிறப்பு நேர்காணல்

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் காதல் பற்றி?

இதை நாம் ஊக்கப்படுத்தக் கூடாது. சேனல் டிஆர்பிக்காக செய்கிறது. ஓரளவுக்கு காதல் பற்றி பேசலாம் ஆனால் அதையே 100 நாட்களுக்கும் கொண்டுசெல்வதால் இந்த நிகழ்ச்சியை குடும்ப பார்வையாளர்கள் பார்ப்பதற்கு யோசிக்கின்றனர்.

என்னிடமே கேட்கிறார்கள் முதல் சீசன் போல் பிக்பாஸ் இப்பொழுது இல்லை என்று. எனவே, கடைசி நேரத்தில் ஏதாவது போட்டியாளர்களுக்கு அதிகளவில் போட்டிகள் வைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

இந்த நிகழ்ச்சியில் மலேசியா, ஸ்ரீலங்காவைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்; இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்த நிகழ்ச்சிக்கு வெளிநாடுகளில் உள்ள மக்களிடமும் ஆதரவைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

உலகளவில் உள்ள தமிழர்களை கவரும் வகையில் மற்ற நாட்டிலும் உள்ள தமிழர்களை இந்த நிகழ்ச்சியில் இடம்பெற செய்துள்ளனர். இந்த விளையாட்டில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பெரும்பாலும் பாமர மக்கள்தான் அவர்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும். எந்த நாடு மற்றும் மொழி சார்ந்தவர்கள் கலந்துகொண்டாலும் அவர்கள் நன்கு தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

இயக்குநர் சேரனுக்கு மரியாதை தரவில்லை என்று பல தரப்பில் குரல் எழுகிறது இதைப்பற்றி?

இயக்குநர் சேரன், அந்த நிகழ்ச்சிக்கு விரும்பி சென்றவர். என்னைப் பொறுத்தவரை அவர் இந்த நிகழ்ச்சிக்கு போய் இருக்க வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். அவருடைய தலைமுறை என்பது வேறு. அவர் அந்த வீட்டில் கைகட்டி நின்று கொண்டிருப்பது. ஏதோ ஒரு காரணத்திற்காக வருத்தப்பட்டு அழுவது என உயரத்தில் இருந்த அவர் இந்த அளவுக்கு அவர் கீழே இறங்கி வர வேண்டாம். அவர் வெளியில் வரும்பொழுது சேதாரம் இல்லாமல் வரவேண்டும்.

இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள்?

வெற்றிக்கான தகுதி இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு குறைவு. இருப்பதில் யார் பெட்டர் என்பதை சேனலும் நிர்வாகமும் மக்களும்தான் முடிவு செய்வார்கள் .என்னைப் பொறுத்தவரை போட்டியாளர்களின் வெற்றிக்கான குவாலிட்டி என்பது மிகவும் குறைவாகத்தான் உள்ளது.

இயக்குநர் சேரனுக்கு வெற்றிக்கான வாய்ப்பு குறைவா?

ஆரம்பத்தில் அவர் உண்மையாகத்தான் இருந்தார். அதன்பிறகு விளையாடத் தொடங்கினார். அப்பா, மகள் சென்டிமென்ட் இருக்கத்தான் வேண்டும். ஒரு அளவுக்குத்தான் அது இருக்கவேண்டும் அளவுக்கு மீறிப் போனதால் அதுவும் ஒரு நடிப்புதான் என்று எண்ண தோன்றுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அவர் மகள் என்று கூறுகிறார். அதன் பிறகு போட்டியிடுகிறார். இதில் எது உண்மையான சேரன் என்பது கேள்விக்குறியாகஉள்ளது. சேரன் சில விளையாட்டுகளை புறக்கணிக்கிறார்.

குழு அமைத்து விளையாடுகிறார்கள் இதுகுறித்து?

இது நரித்தனமான செயல். அன்பு காட்டுகிறோம், பாசம் காட்டுகிறோம், விட்டுக் கொடுக்கிறோம் என்று சொல்கிறவர்கள்தான் இதை செய்வார்கள். நல்ல போட்டியாளர்கள் களத்தில் போட்டியாளர்களாக இருக்கவேண்டும். அதைதான் நாங்கள் முதல் சீசனில் செய்தோம் அதை செய்யவேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

தியாகம் என்பது ஒரு சுய பச்சாதாபத்தை உருவாக்கும் செயலா?

முதலில் இவர்களுக்கு போட்டியே கொடுக்கவில்லை. இரண்டு சீசன்களைவிட இந்த சீசனில்தான் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். கடுமையான சேலஞ்சிங்கான டாஸ்க் கொடுங்கள். ஆனால், இவர்கள் காதல் போதும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் போட்டியாளர்களை குறை சொல்வதை விட நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களைத்தான் குறை கூற வேண்டும்.

பிக் பாஸ் வீட்டில் தியாகம் பற்றி அதிகம் பேசப்படுகிறதே?

நாங்கள் தோற்றாவது நண்பர்களை காப்பாற்றுவோம் என்று கூறுவது அசிங்கமான வார்த்தை. இதை கூறுவதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு நீங்க போய் இருந்திருக்கக்கூடாது. கவினுக்கு நான் கூறுவதெல்லாம் ஒன்றுதான் முதலில் நீங்கள் வெளியில் வாருங்கள். அவர்கள் வெற்றி பெறட்டும் தியாகம் செய்கிறேன் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.

நண்பர்களுக்கு விட்டுக்கொடுப்பது என்ற ஒரு மாயையை உருவாக்கி அவர் வெற்றிபெற முயல்கிறார். இது தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்துவதற்காக தியாகம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இது ஆரோக்கியமான போக்கு அல்ல.

லாஸ்லியா இலங்கை பற்றி கூறுவதற்கு அதிக பேச்சுக்கள் இருந்தாலும் அவர் காதல் போன்ற விளையாட்டுகளில் அதிக நாட்டம் காட்டுகிறார் இதுகுறித்து?

இரண்டு வாரங்கள் எனக்கு லாஸ்லியாவை மிகவும் பிடித்தது. ஏனென்றால் அவரை நான் இலங்கையின் பிரதிநிதியாகவே பார்த்தேன் . அதன்பிறகு அவருடைய ரியாலிட்டி மாறிவிட்டது. இப்போது இருக்கும் லாஸ்லியாதான் உண்மையான லாஸ்லியாவா என்ற கேள்வியும் எழுகிறது.

என்னைப் பொறுத்தவரை அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்தாமல் தவறவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஓவர் ஆட்டிட்யூட் அதிகமாகிவிட்டது. மக்கள் எந்த அளவுக்கு அவரை நேசித்தார்களோ இப்போது அந்த அளவிற்கு வெறுக்கின்றனர். ஒரு மக்களை பற்றியும் நாட்டைப் பற்றியும் போராட்டத்தைப் பற்றியும் பேசக்கூடிய ஒரு களம் கிடைத்த பின்னும் அதை பயன்படுத்தாமல் திசைமாறி பேசுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் நியாயமாக பேசுவது வனிதா மட்டும்தான் இதைப் பற்றி நீங்கள் என்ன விரும்புற விரும்புகிறேன்?

நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன் அந்த நிகழ்ச்சியில் ரியாலிட்டியாக இருக்கும் ஒரே நபர் வனிதா மட்டும்தான். வெளியிலும் அப்படித்தான் இருந்தார். பிக்பாஸ் வீட்டிலும் அப்படித்தான் இருக்கிறார். எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார் என்றால் அது அவருடைய கேரக்டர். போட்டிக்காக தனது குணாதிசயங்களை மாற்றிக்கொண்டு நல்லவராக நடிக்கவில்லை. வனிதாதான் நேர்மையாக உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.