ETV Bharat / sitara

வக்கிரத்தை மறைக்க என்ன தேவை? - பளீர் கேள்வியுடன் ரம்யா நம்பீசனின் 'அன்ஹைட்' - ரம்யா நம்பீசன் இயக்கிய குறும்படம்

பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்கள் பற்றி பேசும் விதமாக குறும்படம் எடுத்துள்ள ரம்யா நம்பீசன், அந்தப் படத்தில் இவ்வுலகம் இருபாலினத்தினருக்குமானது என்பதை பொட்டில் அறைந்தார் போல் கூறியுள்ளார்.

Ramya nambessan short film
Actress Ramya Nambessan
author img

By

Published : Feb 18, 2020, 1:26 PM IST

சென்னை: ரம்யா நம்பீசன் முதல்முறையாக இயக்கி, நடித்துள்ள அன்ஹைட் என்ற குறும்படத்தை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை, பாடகி என திரையுலகில் கலக்க வந்த ரம்யா நம்பீசன் தற்போது இயக்குநராக உருவெடுத்துள்ளார். Ramya Nambessan Encore என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கியிருக்கும் அவர், தனது இயக்கத்தில் உருவான முதல் குறும்படமான அன்ஹைட் படத்தை வெளியிட்டுள்ளார்.

பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல்கள் ஆகியவற்றிற்கு எதிராகவும், பெண்கள் மீது தீணிக்கப்படும் மரபு சார்ந்த விஷயங்களையும் பளீர் கேள்வி எழுப்பும் விதமாகவும் அப்படம் அமைந்துள்ளது. பெண்கள் குறித்து ஆண்களுக்கு இந்தச் சமூகம் சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் கூறுகிறது. இந்த உலகம் இருபாலினத்தினரையும் சார்ந்தே உள்ளது என்பதை பொட்டில் அறைந்தார்போல் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மூன்று நிமிடம் ஓடும் இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், ஷ்ரிதா ஷிவ்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். பத்ரி வெங்கடேஷ் வசனம் எழுதியுள்ளார். படத்தின் கருவை ரம்யா நம்பீசன் தன் குரலால் விவரித்துள்ளார்.

தமிழுக்காக மட்டும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ள ரம்யா நம்பீசன், நவநாகரீக உலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் இந்திய சமூகத்தில் அவர்களின் நிலையைச் சொல்லக்கூடிய விதமாகவும் பேசியுள்ளார். வெறும் பிரச்னைகளை மட்டுமே பேசக்கூடியதாக இல்லாமல் இறுதியில் பிரச்னைகளுக்கான தீர்வைப் பற்றி விவாதிக்க இருப்பாதாகவும் தெரிவித்தார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்தப் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: யுவன் இசையில் ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.