அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான, ’விஸ்வாசம்’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்தது. டி.இமான் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ‘நீயா நானா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் மகள் வெண்பா, ‘கண்ணான கண்ணே’ பாடலை கிடாரில் அருமையாக இசைத்துள்ளார். அந்த வீடியோவை கோபிநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
முன்னதாக இந்த பாடலை கண் பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் பாடி, பலரது கவனத்தைப் பெற்று, தற்போது பாடகராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’சத்தியமா நான் சொல்லுறேன்டி’... வெளியானது பிக் பாஸ் வின்னரின் ஆல்பம் பாடல்!