'பகர்', 'இச்சார் தர்லா பக்கா' போன்ற மராட்டி திரைப்படங்களில் நடித்தவர் அசுதோஷ் பக்ரே. இவர், மராட்டி நடிகையான மயூரி தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், அசுதோஷ் பக்ரே தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில நாள்களாக அசுதோஷ் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது மரணம் குறித்து சிவாஜி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு நீதி கேட்கும் நேரத்தில், அசுதோஷின் மரணம் மராட்டி திரைத்துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.