ETV Bharat / sitara

தாய், கணவனின் மன அழுத்தத்தால் சித்ரா தற்கொலை? - மன அழுத்தத்தால் தற்கொலை செய்த முல்லை சித்ரா

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவன், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கியக் காரணம் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

main reason for Chitra suicide was stress given by both her husband and mother :Police Information

author img

By

Published : Dec 11, 2020, 10:39 AM IST

Updated : Dec 11, 2020, 11:02 AM IST

சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சித் தொடரில் நடித்து ரசிகர் மனத்தில் தனக்கென தனியிடம் பதித்த சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தனியார் விடுதி ஒன்றில் தற்கொலையால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவருக்கு முன்னதாகவே பதிவுத் திருமணம் நடந்ததாகவும், அவருடைய கணவரான ஹேம்நாத் துன்புறுத்தலின் காரணத்தாலேயே அவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் சித்ராவின் தாயார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தெரிவித்துவந்தனர்.

இதனையடுத்து, சித்ராவுடன் பணியாற்றிய நடிகர்கள், நண்பர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று ஹேம்நாத் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் சித்ராவிடம் ஏற்கனவே சண்டையிட்டது தெரியவந்துள்ளது. ஹேம்நாத் குடித்துவிட்டு அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபடுவார் எனவும் பலர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சித்ராவின் தாயார் விஜயா, ஹேம்நாத்தைவிட்டு பிரிந்துவருமாறு தொடர்ந்து கூறிவந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வுசெய்ய சைபர் ஆய்வகத்திற்கு சித்ராவின் செல்போன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஆர்டிஓ விசாரணை முடிவடைந்து அவர்கள் அளிக்கும் இறுதி அறிக்கை முக்கியத் தகவல்களை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்: சக நடிகர்களிடம் விசாரணை

Last Updated : Dec 11, 2020, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.