கோயம்புத்துர் மாவட்டத்தில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமாருக்கு பிறந்தவர் நகைச்சுவை நடிகர் சத்யன் சிவகுமார். பூவும் புயலும் என்ற திரைப்படத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமன இவர். இளையராஜா இசையமைப்பில் வெளியான ‘இளையவன்’ என்ற திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் ஹிட்டான படங்களில் நகைச்சுவை நடிகராக வலம்வர தொடங்கிய இவர், விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற அனைத்து முன்னனி நடிகர்களின் நகைச்சுவை நண்பனாக மாறி தற்போது தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
இவர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்த கஜினி, துப்பாக்கி, நண்பன், அருள், மாயாவி, சிவா மனசுல சக்தி போன்ற படங்கள் பெரும் புகழை அள்ளித் தந்தது. நடிகர் சத்யராஜ் இவரின் மாமா ஆவார். என்னதான் பின்புலம் வலுவாக இருந்தாலும், இவரின் முன்னேற்றத்திற்கு இவரின் கடின உழைப்பே காரணம். இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் சத்யனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இதையும் படிங்க: அம்மாடியோவ்! வாழ்வில் ஒருமுறைகூட இப்படி பார்த்தது இல்லை: மிரண்ட ப்ரீத்தி ஜிந்தா