கரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இதனால் அனைத்துவித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்படும் மெகாத் தொடர்கள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யமுடியாமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, இந்த மெகாத் தொடர்களுக்கு முன்னோடியாகவும் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் தொடர்கள் தற்போது மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகின்றன. தூர்தர்ஷனில் ஏற்கனவே 'ராமாயணம்', 'மகாபாரதம்', 'சக்திமான்' உள்ளிட்டவை ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகின்றன.இதைத் தொடர்ந்து, குழந்தைகளின் ஃபேவரைட் கார்ட்டூனான 'சோட்டா பீம்' தொடரை மறு ஒளிபரப்பு செய்ய தூர்தர்ஷன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து வார்னர் மீடியா என்டர்டெயின்மென்ட் தலைவர் சித்தார்த் ஜெயின் கூறியிருப்பதாவது, இது போன்ற தருணங்களில் போகா சேனலின் நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பொழுதுபோக்காக இருக்கும் என நம்புகிறேன். அதே நேரத்தில் தூர்தர்ஷன் போன்ற பிரபலமான சேனலோடு இணைவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த ஒப்பந்தம் நாடு முழுவதும் உள்ள ஏராளமான இளம் ரசிகர்களை ஈர்க்கும் என்று கூறினார்.