மும்பை: நடிகை கஜோல் மற்றும் 8 நடிகைகள் இணைந்து நடித்துள்ள தேவி என்ற குறும்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
இந்த ட்ரெய்லரை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள நடிகை கஜோல், 9 உக்கிரமான பெண்கள், 9 வெவ்வேறு பின்னணி, ஒரு அபத்தமான உண்மை. இவர்கள் அனைரும் ஒரே அறையில் இருந்தால் என்ன நடக்கிறது என்று பாருங்கள். மார்ச் 2ஆம் தேதி 'தேவி' குறும்படத்தை பார்க்க தயாராகுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
9 fierce women, 9 different backgrounds, 1 stark reality. Here’s a glimpse of what happens when these women are put together in a room! Stay tuned for our short film, #Devi on 2nd March on @largeshortfilmshttps://t.co/LCAnYjc2Pw@shrutihaasan @NehaDhupia @neenakulkarni
— Kajol (@itsKajolD) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">9 fierce women, 9 different backgrounds, 1 stark reality. Here’s a glimpse of what happens when these women are put together in a room! Stay tuned for our short film, #Devi on 2nd March on @largeshortfilmshttps://t.co/LCAnYjc2Pw@shrutihaasan @NehaDhupia @neenakulkarni
— Kajol (@itsKajolD) February 24, 20209 fierce women, 9 different backgrounds, 1 stark reality. Here’s a glimpse of what happens when these women are put together in a room! Stay tuned for our short film, #Devi on 2nd March on @largeshortfilmshttps://t.co/LCAnYjc2Pw@shrutihaasan @NehaDhupia @neenakulkarni
— Kajol (@itsKajolD) February 24, 2020
இளமை, நடுத்தர வயது, முதுமை வயதில் உள்ள 9 பெண்கள் குணங்களின் நுட்பங்களை புரிந்துகொள்ளும் விதமாக, 58 விநாடிகள் ஓடும் இந்த ட்ரெய்லரில் காட்டியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை ஆழமாக முன்வைத்து சொற்போர் நடத்திக்கொண்டிருக்கையில் நடுநிலையாளராக பேசுகிறார் கஜோல்.
இந்தக் குறும்படத்தை பிரயங்கா பேனர்ஜி எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் கஜோல், ஸ்ருதிஹாசன், நேகா துபியா, நீனா குல்கர்னி, முகதா பார்வே, ஷிவானி ரகுவன்ஷி, சந்தியா மத்ரே, ராம ஜோஷி மற்றும் ராஷாஸ்வினி தயாமா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் பார்வைக்கு இந்தப் படம் மார்ச் 2ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.