ETV Bharat / sitara

எதிர்பாராததை எதிர்பாருங்கள்... அட்டகாசமான பிக்பாஸ் புரொமோ! - bigg boss

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5ஆவது சீசனின் புரொமோ காணொலி ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்
பிக்பாஸ்
author img

By

Published : Sep 4, 2021, 7:43 AM IST

Updated : Sep 4, 2021, 10:39 AM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தமிழில் ஏற்கனவே நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளன.

இந்த நிலையில், ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இதனையொட்டி பிக்பாஸ் 5ஆவது சீசனின் புரொமோ காணொலி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், திருமண வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் அக்கறையுடன் மணமக்களை கவனித்துக் கொள்வதாகவும், ஆனால் நேரம் செல்லச் செல்ல மணமக்களின் வீட்டார் சண்டை போட்டுக்கொள்வது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனையடுத்து கமல் ஹாசன், ”ஆயிரம் பொருத்தம் பார்த்துச் செய்யும் கல்யாண வீட்டிலேயே இத்தனைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அப்படி இருக்கையில் பிக்பாஸ் வீடும் பெரிது, கலாட்டாவும் பெரிது” எனக் கூறுவதுபோல இந்தக் காணொலி அமைந்துள்ளது.

இந்தப் புரொமோ காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. மேலும் இந்த மாதம் இறுதிக்குள் 'பிக்பாஸ் 5' நிகழ்ச்சி தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பிக்பாஸ் 5: லீக்கான கமல் ஹாசன் புரோமோ புகைப்படங்கள்

Last Updated : Sep 4, 2021, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.