தமிழில் ஒளிப்பரப்பான 'பிக்பாஸ் சீசன் 4' நிகழ்ச்சியில் பங்கேற்றவர் பாலாஜி முருகதாஸ். இதில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நிகழ்ச்சியில் இவரது செயல்பாடுகளின் மூலம் ரசிகர்கள் அதிகரித்தனர்.
பாலாஜிக்கும் ஆரிக்கும் மோதல் இருந்தாலும் நேர்மையான அணுகுமுறை மூலம் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர். இவரது தந்தை திடீரென காலமானார்.
இது குறித்து பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவும் கடந்துபோகும் என்று பதிவிட்டுள்ளார். இவரது தந்தையின் மறைவுக்கு ஆரி, ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.