ETV Bharat / sitara

'கடைசியா ஒரு தடவ..' - மனைவியைத் தொடக் கூட முடியாமல் கதறி அழுத அருண்ராஜா - Sindhuja Funeral

பிபிஇ கிட்டுடன் மனைவியின் இறுதிச்சடங்கிற்கு வந்த அருண்ராஜா காமராஜ் மனைவியை தொட்டுப்பார்க்கக் கூட முடியாமல் கதறி அழுதார்.

பிபிஇ கிட் ஆடையுடன் அருண்ராஜா காமராஜ்
பிபிஇ கிட் ஆடையுடன் அருண்ராஜா காமராஜ்
author img

By

Published : May 17, 2021, 10:33 PM IST

நடிகரும் இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 38. இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில் சிகிச்சைப் பலனின்றி சிந்துஜா உயிரிழந்தார்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அருண்ராஜா பிபிஇ கிட்டுடன் தனது மனைவியின் முகத்தை கடைசியாகப் பார்க்க வந்திருக்கிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனைவியின் உடலைத் தொட்டுக்கூட பார்க்க முடியாமல், அவர் கதறியதை பார்த்தப் பலரும் அவரின் நிலைமையைக் கண்டு கண் கலங்கினர். முழுக் கவச உடையுடனே அவர் தனது மனைவியாக இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார்.

பிபிஇ கிட் ஆடையுடன் அருண்ராஜா காமராஜ்
பிபிஇ கிட் ஆடையுடன் அருண்ராஜா காமராஜ்

அருண்ராஜா காமராஜ் தமிழ் சினிமாவில் நடிகர் பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர். இவர் 'கனா' படத்தை அடுத்து உதயநிதியை வைத்து 'ஆர்டிகிள் 15' என்னும் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கும் பணியில் இருக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.