ETV Bharat / sitara

முதல் கணவரை பல ஆண்டுகள் கழித்து சந்தித்த ஹாலிவுட் கனவுக்கன்னி: உற்சாகத்தில் ரசிகர்கள்! - ஏஞ்சலினா ஜோலி முதல் கணவர்

விவாகரத்திற்குப் பிறகும் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பலரும் தங்களது முந்தைய வாழ்க்கைத் துணைகளோடு ஆரோக்கியமாக நட்பு பாராட்டி வரும் நிலையில், ஏஞ்சலினா ஜோலி, தனது முதல் கணவர் ஜான் லீ மில்லரை சமீபத்தில் சந்தித்துள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி
ஏஞ்சலினா ஜோலி
author img

By

Published : Jun 13, 2021, 6:49 PM IST

பிரபல ஹாலிவுட் நடிகையும், கனவுக்கன்னியாக கொண்டாடப்பட்டவருமான ஏஞ்சலினா ஜோலி, நடிகர் பிராட் பிட் உடனான மண வாழ்வை மமுறித்துக் கொண்டு தற்போது தன் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார்.

பிராட் பிட்டுக்கு முன்னதாக பிரிட்டிஷ் நடிகர் ஜான் லீ மில்லரைத் திருமணம் செய்து மகிழ்ச்சியான பந்தத்தில் அவருடன் ஜோலி வாழ்ந்து வந்தார். 1995ஆம் ஆண்டு வெளியான ’ஹேக்கர்’ எனும் படத்தில் ஒன்றாக நடித்த இருவரும் காதல்வயப்பட்டு, பின்னர் திருமணம் செய்து கொண்டனர். மில்லர் மீது தீராத காதலில் இருந்த 20 வயது ஜோலி, அப்போது மில்லருக்கு தனது ரத்தத்தால் கடிதம் எழுதினார் எனும் கதைகளும் இன்று வரை தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன.

ஆனால் எதிர்பாராதவிதமாக 1997ஆம் ஆண்டு இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. மில்லரிடம் விவாகரத்து பெற்ற பிறகு, பில்லி பாப் தோர்டான், பிராட் பிட் என இருவரை ஜோலி திருமணம் செய்து விவாகரத்தும் பெற்று, தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். மற்றொரு புறம், மில்லர் நடிகை மிக்சேல் ஹிக்ஸை திருமணம் செய்துகொண்டு 10 ஆண்டு மண வாழ்வுக்குப் பிறகு பிரிந்துள்ளார்.

இந்நிலையில் ஏஞ்சலினா ஜோலி, ஜான் லீ மில்லர் இருவரும் தற்போது சந்தித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகி அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக புகைப்படம் ஒன்றில் ஜான் மில்லர் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு ஜோலி வந்து செல்வது போன்ற புகைப்படம் வெளியாகி புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலியின் சமீபத்திய கணவர் பிராட் பிட், தனது முதல் மனைவி ஜெனிஃபர் ஆனிஸ்டனை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் முன்னதாக வைரலான நிலையில், தற்போது ஜோலி - மில்லரின் ரீயூனியனையும் ஹாலிவுட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.