கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அமிதாப் பச்சன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து அவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள, 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் கலந்து கொண்டுள்ளார். ஏற்கெனவே இந்நிகழ்ச்சியின் 11ஆவது சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 12ஆவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''மீண்டும் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மிகவும் பாதுகாப்புடன் நடைபெறுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சி கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், தற்போது வரை 11 சீசன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">