20 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கல்யாணி ரோஹித். இன்று வரை பிரபு தேவாவுடன் இவர் நடனமாடிய 'சென்னை பட்டணம்' பாடல் பல 90ஸ் கிட்ஸ்கள் அறிந்ததே.
இதன் பிறகு இவர் 'ஜெயம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். பல சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் கல்யாணி. இதன் பின்னர் திருமணமாகி நடிப்புக்கு முழுக்கு போட்டார் கல்யாணி. சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகத்தான் நடிப்பை விட்டு விலகியதாக கல்யாணி தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் ப்ரோகிராமிங் ஹெட் ஒருவர் ஒரு நிகழ்ச்சி குறித்து ஆலோசிக்க இரவு நேரத்தில் பப்புக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து சற்று தயக்கமான கல்யாணி அவரை வேறு இடத்தில் சந்திக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அதை அந்த நபர் பொருட்படுத்தாமல் கல்யாணிக்கு சரியான பதிலை தராமல் அழைப்பை துண்டித்துள்ளார். இதன் பிறகு கல்யாணி வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் அந்த நபர் பறித்துள்ளார். மேலும் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கல்யாணியை அணுகும் இயக்குநர்கள் கூட அவரை அட்ஜஸ்ட்மெண்ட் அதாவது தங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு கோரியுள்ளனர். இதனால்தான் படங்களில் தான் நடிக்காமல் போனதாக கல்யாணி பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க... சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் போக்சோவில் கைது!