சமூக வலைதளத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு வெள்ளித்திரை நடிகைகளுக்கே சவால் விட்டு வந்தவர், தர்ஷா குப்தா.
இவர் பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கமாக இருந்தது. இதனால் இவரை பின்தொடர்வேரின் எண்ணிக்கை அதிகரித்தது.
![Dharsha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12696922_dar-1.jpg)
இதற்கிடையில் 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து இவர் தற்போது 'செந்தூரப் பூவே' என்னும் தமிழ்த்தொடரில் நடித்து வருகிறார்.
![Dharsha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12696922_dar-2.jpg)
இந்தத் தொடரில் தர்ஷா குப்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் அழகான ராட்சசியாக நிலைகொண்டார்.
தற்போது இந்தத் தொடரில் இருந்து தர்ஷா குப்தா விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![Dharsha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12696922_dar-3.jpg)
தர்ஷா குப்தா இந்தத் தொடரில் இருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான காரணம் தெரியவில்லை.