கரோனாவால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அதில் திரையரங்குகளும் அடங்கும். கரோனா சமயத்தில் பலரும் ஓடிடி தளங்களில் திரைப்படங்களை பார்த்து வந்ததால் ஏராளமான ஓடிடி தளங்கள் புதிது புதிதாக உருவாகின. இது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது ஓடிடியை அடுத்து தொலைக்காட்சியில் படத்தை நேரடியாக ஒளிபரப்ப ஒருசில தயாரிப்பாளர்கள் முடிவு செய்து படங்களை ஒளிபரப்புகின்றனர். முத்தையா இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்த 'புலிக்குத்தி பாண்டி', சமுத்திரக்கனியின் 'ஏலே' ஆகிய படங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.
-
#BREAKING | இப்போது வெள்ளித்திரைக்கு முன்பாகவே உங்கள் இல்லத் திரையில்! 📺🥳
— Colors Tamil (@ColorsTvTamil) March 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
நடிகர் #Kathir மற்றும் #Soori-யின் அசத்தலான நடிப்பில் கலகலப்பான குடும்பத் திரைப்படம் 👨👩👦👦#Sarbath - ஏப்ரல் 11, ஞாயிறு மாலை 4 மணி மற்றும் இரவு 7 மணிக்கு@am_kathir | @sooriofficial | #DTR | #ColorsTamil pic.twitter.com/j6u3reN7aJ
">#BREAKING | இப்போது வெள்ளித்திரைக்கு முன்பாகவே உங்கள் இல்லத் திரையில்! 📺🥳
— Colors Tamil (@ColorsTvTamil) March 14, 2021
நடிகர் #Kathir மற்றும் #Soori-யின் அசத்தலான நடிப்பில் கலகலப்பான குடும்பத் திரைப்படம் 👨👩👦👦#Sarbath - ஏப்ரல் 11, ஞாயிறு மாலை 4 மணி மற்றும் இரவு 7 மணிக்கு@am_kathir | @sooriofficial | #DTR | #ColorsTamil pic.twitter.com/j6u3reN7aJ#BREAKING | இப்போது வெள்ளித்திரைக்கு முன்பாகவே உங்கள் இல்லத் திரையில்! 📺🥳
— Colors Tamil (@ColorsTvTamil) March 14, 2021
நடிகர் #Kathir மற்றும் #Soori-யின் அசத்தலான நடிப்பில் கலகலப்பான குடும்பத் திரைப்படம் 👨👩👦👦#Sarbath - ஏப்ரல் 11, ஞாயிறு மாலை 4 மணி மற்றும் இரவு 7 மணிக்கு@am_kathir | @sooriofficial | #DTR | #ColorsTamil pic.twitter.com/j6u3reN7aJ
இந்நிலையில் தற்போது நடிகர் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்பத்' திரைப்படமும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது. பிரபாகரன் இயக்கிய இந்த படத்தை 7 ஸ்டூடியோஸ் லலித்குமார், வயாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
'சர்பத்' படத்தில் கதிருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரகசியா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏப்ரல் 11ஆம் தேதி இப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.