ETV Bharat / sitara

'ரெண்டு பெண் குழந்தைகள பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது' - இயக்குநர் ரத்னகுமார் - சிறுமி பாலியல் வன்புணர்வு

சென்னை: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இயக்குநர் ரத்னகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.

ரத்தினகுமார்
ரத்தினகுமார்
author img

By

Published : Jul 3, 2020, 2:42 PM IST

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல்வேறு துறை சார்ந்தவர்கள் இந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் தங்களின் கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'அந்த குழந்த முகக்கவசம் லாம் போட்டுட்டு சிரிச்சி பேசி விளையாடிட்டு இருந்திருக்கா டா டேய். கெடுத்து கொன்னுட்டீங்களே டா. இப்படி ஒரு கேடுகெட்ட உலகத்துல நான் ரெண்டு பெண் குழந்தைகள பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், நடிகை அதுல்யா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், ’தமிழ்நாட்டில் மற்றொரு வேதனையான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்கள் இருக்கும்வரை நமது சமூகம் ஒருபோதும் மாறாது. சமூக ஊடங்களில் அழுவது இதற்கு ஒரு தீர்வாகாது. அரசால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் இன்று #JusticeforJayapriya, நாளை அது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்’ என பதிவிட்டுள்ளார்.

மேலும், நடிகை பிரியா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் தயவுசெய்து அந்த சிறுமியின் புகைப்படத்தை பகிராதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, இயக்குநரும், நடிகருமான நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், மரணதண்டனை விதித்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது என்று நம்புவது சரியா? கோவையில் இப்படி ஒரு குற்றவாளியை காவல் துறையே சுட்டுக் கொன்றது நாம் அறிந்ததே. அதற்கு பிறகு கொடூரங்கள் நடக்கவில்லையா என்ன?
பெண்ணை காமப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணின் மனநிலை மாற வேண்டும்.#JusticeforJayapriya என்று பதிவிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு தவறு நடக்கும்போது அதற்கான தண்டனை வழங்கப்பட்டு அதுபோல தவறு செய்தால் நாம் இப்படி தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் இச்சமூகத்தில் உருவாகாதவரை பல ஜெயப்ரியாக்களை இழந்துகொண்டேதான் இருப்போம். வருத்தம் கொள்கிறேன் மகளே. இக்கேடுகெட்ட மனிதர்களிடையே நீ மலர்ந்ததை எண்ணி. #JusticeforJayapriya என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.