மும்பை: ஆயுஷ்மானுடன் இணைந்து ரசிகர்களுடன் உரையாடியபோது மனைவி தீபிகாவிடம் திட்டு வாங்கியுள்ளார் ரன்வீர் சிங்.
பாலிவுட் இளம் நடிகரான ஆயுஷ்மான் குர்ரானா தனது ரசிகர்களுடன் வீடியோ மூலம் உரையாடியுள்ளார். அப்போது திடீர் சர்ப்ரைஸாக ரன்வீர் சிங்குக்கு அழைப்பு விடுத்து அவரையும் தனது வீடியோவுடன் இணைத்தார்.
நீண்ட தலைமுடியுடன் இருந்த ரன்வீர் சிங் ரசிகர்களுடன் உரையாடிய குஷியில் சத்தமாக ஆயுஷ்மான் குர்ரானவிடம் பேசியுள்ளார்.
இதைக்கண்டு அருகிலிருந்த ரன்வீரின் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே அவரைத் திட்டியும், சத்தமில்லாமல் பேசுமாறு கூறிய நிலையில், மைத்துனி திட்டுவதாக கூறி எஸ்கேப் ஆகினார். இருவருக்குமிடையேயான இந்த உரையாடல் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோவில், சட்டென வீடியோவில் இணைந்த ரன்வீர், படபடவென பேசுகிறார். பின்னர் அமைதியாக பேசுமாறு உங்களது மைதுனி சொல்கிறார். நான் இப்போதைக்கு கிளம்புகிறேன் என்று சொல்லி வீடியோவை துண்டித்தார். பதிலுக்கு ஆயுஷ்மான் குர்ரானாவும், மிஸ் செய்வதாக பதில் கூற வீடியோ முடிவடைகிறது.
ஆயுஷ்மான் குர்ரானா நடித்துள்ள புதிய படமான குலாபோ சிதாபோ ஜூன் 12ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாகவுள்ளது. இதேபோல் ரன்வீர் சிங், கடந்த 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் 83 படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.