ETV Bharat / sitara

'தமிழ்நாடு காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது?' - நடிகர் ராஜ்கிரண் கேள்வி - சிறையில் இறந்த தந்தை-மகன்

சென்னை: சிறையில் மர்மமான முறையில் இறந்த சாத்தான்குளம் தந்தை, மகன் விவகாரத்தில் காவல் துறையினரைக் கண்டித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராஜ்கிரண்
ராஜ்கிரண்
author img

By

Published : Jun 30, 2020, 5:22 PM IST

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நடிகர் ராஜ்கிரண் இச்சம்பவத்தைக் கண்டித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ”அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடம் பவ்யம் காட்டி, சலாம் போடும் காவல் துறையினரில் ஒரு பகுதியினர், சாமானிய மக்களிடம், அத்துமீறி அராஜகத்தின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர். இவர்களுக்குப் பக்கபலமாக, சான்றிதழ் கொடுக்க வேண்டிய மருத்துவர்களும், சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டிய நீதிபதிகளும், சிறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய சிறைத் துறை அலுவலர்களும், தங்களின் கடமைகளை மறந்து உடந்தையாகி விடுகிறார்கள்.

இதற்கு, அவர்களுக்குச் சட்டம் தெரியாதது மட்டுமல்ல. அப்படியே ஏதாவதொன்று ஆனாலும், அரசியல்வாதிகளின் தயவால், சட்டத்தைத் தத்தமது போக்குக்கு வளைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும்தான், இம்மாதிரியான கயமைத்தனங்களுக்கு மூலக் காரணம். சாத்தான் குளம் சம்பவத்துக்கும் இதுதான் அடிப்படை. இதைப் போன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தாலும், எதிலும் அவர்கள் தண்டிக்கப்படாததால் ஏற்பட்ட குருட்டு தைரியம் தான், அவர்களை எல்லை மீறி போக வைக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் அடிப்படையில் கைதுசெய்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதுதான் நம் வேலை என்பதை இவர்கள் மறந்து பல காலங்களாகிவிட்டன. சாத்தான் குளம் படுகொலைகளுக்குப் பின்பு காவல் துறையின் மிக உயர்ந்த பொறுப்புக்களில் இருக்கும், பல நேர்மையான அலுவலர்கள், இவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, காவல் துறையினரின் வேலை என்ன, அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெள்ளத்தெளிவாக அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனாலும் கீழ்மட்டத்திலுள்ளவர்கள் அதை மதிக்காமல், சமூக வலைதளங்களில் மீண்டும் திமிர்த்தனமாக பதிவுகள் இடுவதைப் பார்க்கும்போது, தமிழ்நாடு காவல் துறை, யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதை, ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட, தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரின் ஆத்மாவும், கடவுளின் நிழலில் இளைப்பாறி அமைதியடையவும், அவர்களை அநியாயமாக இழந்து தவிக்கும், அவர்களின் குடும்பத்தினரும், சொந்தபந்தங்களும், நண்பர்களும்,
மீள முடியாத வேதனையிலிருந்து மீண்டு வரவும், இந்தப் படுகொலைகளுக்கு நீதி வேண்டியும், எல்லாம் வல்ல இறைவனிடம்
கண்ணீர் மல்க பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.