சென்னை: இக்காலக்கட்டத்தில் வெளிவரும் தமிழ்ப் படங்கள் கரோனாவால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கும்விதத்தில் அதிக தொழில்நுட்பக் கலைகளுடனும், வேறுபட்ட கதைக்களத்திலும் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த வரிசையில் முன்னணியில் இருப்பவர் இயக்குநர் பா. இரஞ்சித், இவரின் அனைத்துப் படங்களும் பொதுவெளியில் நாம் காண தவறிய பல மனிதர்களையும், நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
தலைப்புக்கு ஏற்றாற்போல் போஸ்டர்
இரஞ்சித்தின் காலா, கபாலி, மெட்ராஸ் போன்ற படங்கள் அரசியல் கதைக்களத்துடன் வெளிவந்து பல்வேறுவிதமான பாராட்டுகளையும் மேலும் பல விமர்சனங்களையும் பெற்றது. இந்த வரிசையில் தற்போது இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் ஃபிராங்கிளின் ஜேக்கப் இயக்கிய ரைட்டர் படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் போஸ்டர்கள் கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதிகம் பேரால் பகிரப்பட்டும் வருகிறது. படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு அனைத்துப் போஸ்டர்களும் கச்சிதமாக உள்ளன.
இதையும் படிங்க:முதல்முறையாக அதுல்யாவுடன் ஜோடி சேர்ந்த ஹரீஷ் கல்யாண்