ETV Bharat / sitara

சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டம் - ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள் - சூர்யா

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா
சூர்யா
author img

By

Published : Jul 13, 2020, 1:24 PM IST

தமிழ் சினிமாவில் 'நடிப்பின் நாயகன்' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சூர்யா. ஒரு பக்கம் நடிப்பு, மற்றொரு பக்கம் அகரம் பவுண்டேஷன், சமூக சேவை என்று படு பிஸியாக இருப்பவர்.

அவர் தனது 45ஆவது பிறந்த நாளை வரும் 23ஆம் தேதி கொண்டாட உள்ளார். இதையொட்டி அவரது ரசிகர்கள் தங்களின் அன்பை சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், சூர்யாவின் பிறந்த நாள் உலகம் முழுவதும் தெரிய வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள், இந்தியாவில் மிகவும் பிரபலமாக வலம்வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115 பிரபலங்களை நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தொடர்புகொண்டு சூர்யாவின் பிறந்த நாள் போஸ்டரை (Common DP) அவரவர்களின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட வைத்துள்ளனர்.

இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் ஆர்யா, நடிகை சிம்ரன், நிக்கி கல்ராணி, லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல்ராஜா என்று பலரும் தங்களின் சமூக வலைதளங்களில் #SuriyaBirthdayFestCDP என்ற ஹாஷ் டாக்குடன் போஸ்டரை வெளியிட்டனர்.

இதன்மூலம் 24 மணி நேரத்திற்குள் ஏழு மில்லியனுக்கும் அதிகமாக அந்த ஹாஷ் டாக் பகிரப்பட்டுள்ளது. இந்திய நடிகர் ஒருவரின் பிறந்தநாள் போஸ்டர் ஏழு மில்லியன் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சூரரைப் போற்று படத்தில் சூர்யா புலியாக பாய்வார் - சிவக்குமார் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.