தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகப் பணியாற்றி வருபவர் யுவன் சங்கர் ராஜா. இசையமைப்பது மட்டுமின்றி, தனது காந்த குரலால் பாடல் பாடி பலரது நெஞ்சங்களைக் கொள்ளை அடித்துள்ளார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாஃப்ரூன் நிஷாவைத் திருமணம் செய்து கொண்டு, இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்.
இந்நிலையில் யுவனின் மனைவி, யு1 ரெக்கார்ட்ஸுக்கு வீடியோ நேர்காணல் வழங்கினார். அப்போது அவரிடம் போதைப்பொருள் வைத்திருப்பதற்கு, ஏதேனும் கட்டணம் செலுத்துகிறீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த யுவனின் மனைவி, "நீங்க யுவனை தானே ட்ரக்னு (drug) சொல்றீங்க. நான் வீட்டிலேயே 70 கிலோ ட்ரக்கை மறைச்சி வச்சிருக்கேன். அவர் தான் எங்க போனாலும் என்னுடைய ட்ரக்.
அவர் ட்ரக் மட்டுமில்லை. அவர் தான் என்னுடைய விட்டமின். அதனால் எப்போதும் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டுப் போறேன்" எனக் கூறியுள்ளார்.