இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இதில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, சஞ்சீவ், சாந்தனு என்று ஏராளமானோர் நடித்துவருகின்றனர். இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியான ‘மாஸ்டரின் குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’ என இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் நேற்று திடீர் சர்ப்ரைஸாக ‘வாத்தி ரைய்டு’ பாடல் வெளியானது.
இதற்கிடையில் இன்று இப்படத்தின் இசை வெளீயிட்டு விழா இன்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி ‘மாஸ்டர்’ படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள ‘அந்தக் கண்ண பார்த்தாக்கா’ பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன், விஜய் படத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ’மாஸ்டர்‘ படத்தில் ஏழு பாடல்கள் உள்ளன. இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் ’மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலாகவுள்ளனர்.
இதையும் படிங்க: விஜய்யின் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!