அசுரன் படத்தின் ரிலீசை எதிர்நோக்கி காத்திருக்கும் தனுஷ், அடுத்ததாக பரியேறும் பெருமாள் புகழ் மாரி செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில் தனுஷ்-மாரிசெல்வராஜ்-சந்தோஷ் நாரயணன் ஆகியோர் லண்டனில் இருப்பது போல் புகைப்படங்கள் வெளியானது. மேலும், கார்த்திக் சுப்பராஜின் படத்தில் தனுஷ் தற்போது நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனுஷ் - செல்வராகவன் ஐந்தாவது முறையாக புதிய படம் ஒன்றில் இணையவுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. டி41 என்று அழைக்கப்படும் இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றவுள்ளார் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவர் சில காரணங்களால் படத்திலிருந்து விலகியுள்ளாராம். மேலும், யுவனுக்கு பதிலாக தனுஷ் இயக்கி நடித்த ப. பாண்டி படத்துக்கு இசையமைத்த ஷான் ரோல்டான் இசையமைக்கவுள்ளாராம்.
இதனிடையே, இந்தப் படத்துக்கு இரண்டு பாடல்களுக்கு அவர் கம்போஸ் செய்து முடித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.