ஹாலிவுட் சினிமாக்களில் கிரவுட் ஃபண்டிங் (crowd Funding) கலாச்சாரம் பல வருடங்களுக்கு முன்பே தொடங்கவிட்டது. இதனை பரிசோதனை முயற்சியாக இந்திய சினிமாவில் செய்தாலும், அதில் பெரிதாக இதுவரை யாரும் வெற்றிபெறவில்லை. கன்னட சினிமாவில் கிரவுட் ஃபண்டிங் மூலம் வெளியான லூசியா திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.
அதே கிரவுட் ஃபண்டிங்கை முன்மாதிரியாக பின்பற்றி தற்போது தமிழ் சினிமாவிலும் படங்கள் வெளியாகவுள்ளன. அதில் பிரபல யூடியூப் பக்கத்தின் நாயகர்கள் கோபி, சுதாகர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். அந்தப் படத்திற்கு ''ஹேய் மனி கம் டுடே கோ டுமாரோ'' (Hey Money Come today Go tomorrow) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த கிரவுட் ஃபண்டிங் மூலம் பொதுமக்களிடமிருந்து மொத்தமாக ரூ.6.3 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சாக் இயக்குகிறார். ஜாக்ஸ் பிஜே இசையமைக்கிறார். ஒளிப்பதிவினை நிஜய் கவனிக்கிறார். சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் அறிமுக விழாவில் நடிகர் ராதாரவி, இயக்குநர்கள் லலிதா, மணி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் பெயரை அறிமுகப்படுத்தினர். அதைத்தொடர்ந்து விழாவிற்கு வந்தவர்களுடன் சிறு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இதையும் படிங்க: 'நான் பாடுவது பகவான் கொடுத்த வரப்பிரசாதம்' - பாடகர் யேசுதாஸ்