அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் 'மண்டேலா'. இயக்குநர் பாலாஜி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ஓபன் விண்டோ புரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது.
படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். 'மண்டேலா' படத்தில் யோகிபாபுவுடன் சங்கிலி முருகன், ஜிஎம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பணத்திற்காக வாக்கை விற்கும் நபரின் அவஸ்தைய நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சிந்திக்கவைக்கும் படமாக இது உருவானது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியிலும், அதனைத் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது.
இந்தப் படம் விமர்சன ரீதியாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படத்தில் யோகிபாபுவின் நடிப்பு சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள், திரைபிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்தனர். தற்போது இப்படம் நூறு நாள்களை கடந்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மண்டேலா மறு தணிக்கை வழக்கு; படக்குழு பதிலளிக்க உத்தரவு!