சென்னை: பாலிவுட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பம்பர் ஹிட் அடித்த திரைப்படம் அந்தாதூன். ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மேலும் இந்தப் படம் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றி, தனது மகன் பிரசாந்தை வைத்து 'அந்தகன்' என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.
-
Break Moments @actorprashanth plays cricket during the shooting of @actorthiagaraja directorial #Andhagan with director #ksravikumar @iYogiBabu #Teakadaicinema #NMNews23 #NM pic.twitter.com/zG4Lli34cT
— Nikil Murukan (@onlynikil) April 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Break Moments @actorprashanth plays cricket during the shooting of @actorthiagaraja directorial #Andhagan with director #ksravikumar @iYogiBabu #Teakadaicinema #NMNews23 #NM pic.twitter.com/zG4Lli34cT
— Nikil Murukan (@onlynikil) April 25, 2021Break Moments @actorprashanth plays cricket during the shooting of @actorthiagaraja directorial #Andhagan with director #ksravikumar @iYogiBabu #Teakadaicinema #NMNews23 #NM pic.twitter.com/zG4Lli34cT
— Nikil Murukan (@onlynikil) April 25, 2021
பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் பிரசாந்த், யோகிபாபு ஆகியோர் இணைந்து கிரிக்கெட் விளையாடிய காணொலி வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுடன் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கௌதம் மேனன்?