தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக மாறியுள்ளவர் நடிகர் யோகி பாபு. தனது யதார்த்தமான பஞ்ச் டயலாக் மூலம் இவர் அடிக்கும் நகைச்சுவைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லமல் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இவருக்கும், பார்கவிக்கும் கடந்த மாதம் குலதெய்வ கோயிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன், மணமகளின் வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதையடுத்து திரைத்துறை பிரபலங்களை அழைத்து சிறப்பாக தனது திருமண வரவேற்பை நிகழ்ச்சியை ஏப்ரல் 5ஆம் நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 5ஆம் தேதி நடக்கவிருந்த யோகிய பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரஸ் தாக்குதல் குறைந்த பிறகு மே மாதம், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடந்த யோகி பாபு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் யோகி பாபு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படம் பார்க்க சீனாவுக்கு வாங்க: திரையரங்கை திறக்கும் சீனா அரசு