தமிழ் சினிமாவின் காமெடி மன்னனாக வலம்வந்த யோகி பாபு, கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'கூர்கா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இருப்பினும், முக்கியப் படங்களில் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவரின் முதல் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், இரண்டாம் படத்தில் ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.
பாடி லாங்குவேஜ், முகப்பாவனைகள் மூலம் 'மண்டேலா' படத்தில் கலக்கிய யோகிபாபு, தற்போது தனது அடுத்த பயணத்தை இயக்குநர் யாசினுடன் காட்டில் தொடங்கியுள்ளார்.
இப்படத்திற்கு பிரபாதீஸ் ஷாம்ஸ் மற்றும் ராட்சஷி பட இயக்குநர் கவுதம் ராஜ் இணைந்து கதை எழுதியுள்ளனர். இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், பூஜா, தேவா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
'வீரப்பன் கஜானா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் காட்டின் பெருமையை பேண்டஸியாக சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஷெரின்