ETV Bharat / sitara

தன் பிறந்த நாளன்று மகனுக்குப் பெயர் சூட்டிய யோகி பாபு - latest kollywood news

நடிகர் யோகி பாபு, தனது பிறந்த நாளன்று மகனுக்குப் பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளார்.

யோகி பாபு
யோகி பாபு
author img

By

Published : Jul 22, 2021, 7:35 PM IST

நடிகர் யோகி பாபு கடந்த ஆண்டு வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்பவரை எளிமையான முறையில் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து தனக்கு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தார்.

இந்நிலையில் யோகி பாபு தனது பிறந்தநாளான இன்று (ஜூலை 22) மகனுக்குப் பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளார். அவர் மிகப்பெரிய முருகன் பக்தர் என்பதால் மகனுக்கு 'விசாகன்' எனப்பெயர் வைத்துள்ளார். இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, யோகி பாபு தீவிரமுருகன் பக்தர் என்பதால், அவருக்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் முருகன் சிலையை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அஜித்துடன் செலவழித்த நேரம் என் வாழ்க்கைக்கான பாடம்: 'வேம்புலி' ஜான் கொக்கென்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.