ETV Bharat / sitara

வீரப்பன் குடும்பத்தார் வேண்டுகோள்: யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம்! - yogi babu movie title changed after veerappan family request

முழுக்க முழுக்க சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும், பெரியவர்களை சிரிக்க வைக்கும் வகையிலும், காட்டையும், அதனைச் சார்ந்த விஷயங்களையும் சுவாரஸ்யமாக சொல்லும் வகையில்தான் இப்படத்தின் திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

http://10.10.50.85//tamil-nadu/25-August-2021/tn-che-05-yogibabu-veerappan-script-7205221_25082021133934_2508f_1629878974_922.jpg

author img

By

Published : Aug 25, 2021, 4:22 PM IST

சென்னை: யோகி பாபு யூடியூப்பராக களமிறக்கும் ‘வீரப்பனின் கஜானா’ படத்தின் தலைப்பு மாற்றப்படவுள்ளது.

’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கிவரும் படம் ‘வீரப்பனின் கஜானா’. காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக இது உருவாகி வருகிறது.

இப்படத்தில் யோகி பாபு முதல் முறையாக யூடியூப்பர் வேடத்தில் நடிக்கிறார். எந்த வேடமாக இருந்தாலும், அதில் தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் யோகி பாபு, தற்போது டிரெண்டிங்கில் உள்ள யூடியூப்பர்களை கலாய்க்க தயராகி விட்டார்.

வீரப்பன் குடும்பத்தார் வேண்டுகோள்: யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம்!

யோகி பாபு நடிக்கும் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு புதிதாக இருப்பதோடு, அவர்களிடம் கூடுதல் கவனம் பெரும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மொட்டை ராஜேந்திரனும் இணைந்திருப்பதால், இவர்களுடைய கூட்டணியின் காமெடி காட்சிகள் ரொம்ப தூக்கலாகவே வந்திருக்கிறதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இப்படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளது. ஆம், ‘வீரப்பனின் கஜானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் கதைக்கும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. முழுக்க முழுக்க சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும், பெரியவர்களை சிரிக்க வைக்கும் வகையிலும், காட்டையும், அதனைச் சார்ந்த விஷயங்களையும் சுவாரஸ்யமாக சொல்லும் வகையில்தான் இப்படத்தின் திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், படத்தின் தலைப்பு தொடர்பாக படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசிய மறைந்த வீரப்பன் குடும்பத்தார், வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று படக்குழுவினரும் ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் புதிய தலைப்பு இதைவிட சுவாரஸ்யமான தலைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பீஸ்ட் அப்டேட் - அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.