’சென்னை 28’, ‘மங்காத்தா’ உள்ளிட்ட ஹிட் படங்களைத் தந்த இயக்குநர் வெங்கட் பிரபு, வெப் சீரிஸில் களமிறங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வெங்கட் பிரபு கடைசியாக இயக்கிய ‘பார்ட்டி’ திரைப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது. வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், படத்துக்காக எழுதிய கதையை வெப் சீரிஸாக இயக்கி வருகிறார். தற்போது இதில் யோகி பாபு இணைந்து பணியாற்றவுள்ளார்.
அமீர் நடித்த ‘யோகி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான யோகி பாபு, தன்னுடைய கடின உழைப்பால் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியனாக வளர்ந்து நிற்கிறார். ரஜினியுடன் ‘தர்பார்’, விஜய்யுடன் ‘பிகில்’ ஆகிய படங்களை முடித்துவிட்டு வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் 10 தொடர்களாக வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: சிவாஜி கணேசன், கமல்ஹாசனை ஓவர்டேக் செய்யும் யோகிபாபு!